பொதுவகவே ஒரு சில நேரங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்யும் அனைத்து தகவலும் வன்தட்டில் பதிவு செய்யபடும் என்பதால் வன்தட்டு என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும். வன்தட்டு சரியான முறையில் இயங்க மென்பொருள்களை பயன்படுத்தி ஃபைலை ஒருங்கு இணைப்போம்(defragmentation,disk cleanup). வன்தட்டு பழுதுயடைவதற்க்கு நிறைய வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த வழி என்று பார்ப்போம். முதலில் வன்தட்டு பழுதாகிவிட்டால் நம்முடைய தகவல் அழிந்துவிடுமா ! என்ற ஐயம் இருக்கும். பழுதாகி இருக்கும் வந்தட்டிலுள்ள தகவலை பெற சில பிரச்சனைக்கு மட்டும் Data Clinic என்ற மென்பொருள் உதவியுடன் அந்த தகவலை பெறலாம்.
எலக்டிரிக்கல் போர்டு, மோட்டார் பாகம், ப்ரோக்ராம் அடங்கிய சிப்(Hard disk firmware) ஆகியவை வன்தட்டில் இருக்கும். இவை ஹார்ட் டிஸ்க் இயங்குவதற்க்கு பயன்படுகிறது.
ஹார்ட்டிஸ்க் பிர்ம்வேர் என்பது ஒரு வகையான ப்ரோக்ராம் அடங்கிய எம்ப்பெடெட் சிப். இது பழுதாகிவிட வாய்ப்பு உள்ளது. இவ்வகையான பிரச்சனை ஏற்பட்டால் , பழுதாக்கிய நிலையில் வன்தட்டு சரியா ஃபைல்லை குறிப்பிட முடியாது அது தவறான ஃபைல்லை சூட்டிக்காட்டும். இதனால் கூட கணினியில் ஹார்ட் டிஸ்க் பழுது என்ற செய்தியை பெறலாம். ஹார்ட்டிஸ்க் பிர்ம்வேர் பழுதாகிவிட்டால் வன்தட்டில் உள்ள தகவலை பெற Low level Language Program னை பயன்படுத்தி ரீ-ப்ரோக்ராம் செய்து பார்க்கலாம்.
எலக்டிரிக்கல் போர்டு செயல் இழந்து விட்டால் 100% தகவலை மீண்டும் வன்தட்டிலிருந்து Data Clinic என்ற மென்பொருள் உதவிடன் பெற முடியும. வன்தட்டிலுள்ள சர்க்யூட்போர்டு சார்ட்டாக வாய்ப்பு உள்ளது. இதனை BIOS-னால் கண்டறிய முடியாது. கணினியை இயக்க ஆரம்பிக்க பொழுது வன்தட்டுலுள்ள மோட்டார் சூத்தாமல் அந்த டிஸ்க் நின்றுவிடும். இதனால் கூட ஹார்ட் டிஸ்க் பழுதாகலாம்.
மெக்கானிக்கல் வழியாக பழுதாவதை பார்போம். மோட்டார் என்பதால் வன்தட்டிலுள்ள டிஸ்க்கை இயக்குவதற்க்கு இது பயன்படுகிறது. இது செயல் இழந்துவிட்டால் கணினியில் இருந்து கிளிக்கிங்க் ஒலி சிறியதாக எழும். இதிலும் முழுமையாக தகவலை வன்தட்டில் திரும்ப பெற முடியும்.
லாஜிகல் எர்ரர், இது ஒரு வகையான பிரச்சனை. இது தவறான முகவரியை ஃபைல் அல்லோகேஷன் டேபிளில்(FAT) பதித்துவிடும்.கணினி ஸ்டார்ட் ஆனாலும் கூட இந்த பிரச்சனையால் சரியான தகவலை வன்தட்டிலிருந்து பெற முடியாது. இதிலும் தகவலை மீண்டும் பெற பலவகையான மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. இது எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் பழுதைவிட மிக கடினமானது வித்தியாசமானது கூட.
இது தவிற மடிக்கணினி அல்லது ஹார்ட்டிஸ்க் தவறி கீழே விழுந்தால் தகவலை மீண்டும் பெற முடியாது.
|
No comments:
Post a Comment