*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

UBERSTUDENT1.0 Cicero புதுசு

மாணவர்கள் எதிர்ப்பார்த்து கொண்டு இருந்த  uberstudent1.0 வந்து விட்டது  இது தனது முதல் பதிப்பை வெளிட்டு உள்ளது.டெபியன் வகையை சார்ந்தவை  பார்ப்பதுக்கு உபுண்டு Gnome போலவே தான்.இதில் விண்டோ,நுழைவுவாயில்(login),3D என மனதை கவரும் வகையில் அமைத்து இருக்கிறது.  பொறியில் மாணவர்கள்,லினக்ஸ் பயனாளர்,ஆசிரியர்க்கு  இது பயன் உள்ளதாக இருக்கும். இதில் மாணவர்களுக்கு  தேவையான  தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள்கள் inbuilt ஆக இயங்குதளத்துடன் உருவாக்கப்பட்டு  உள்ளது.மாணவர்கள் கற்றுக் கொள்ளுவதுக்கும்,எளிய முறையில் லினக்ஸினை பயன்படுத்துவதற்கும் userstudent லினக்ஸ் உகந்ததாக இருக்கும்.
இதனை தரவிறக்கம் செய்ய http://www.uberstudent.org/mod/resource/view.php?id=30  என்ற முகவரியை அணுகவும்.ஓபன் சுசி  11.3 விட அதிகமாக மென்பொருளை கொண்டவை யாம் 
இதில் உள்ள மென்பொருள்கள் சிலவற்றை சொன்னால் மொபைல், விர்ச்சுவல் பாக்ஸ்(virutal box), எளிதாக பேக்கப் எடுக்க கூடிய remastersys, PDF editing, அழகிய வடிவில்லான dock, Resume builder, Drivers, Gimp, Books, Self management, Study aids, Subjects, Research and Writing என்ன எராளமான மென்பொருள் இதில் அடங்கி உள்ளது.எதனை கணினியில் எளிதில் நிறுவி விடலாம் .

கணினியில் மின் நூலகம் அமைத்தல்

அன்று முதல் இன்று வரை மனிதனின் அறிவு சார்ந்த கருத்துக்கள், தொழிநுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் நூலகங்களில் பாதுகாத்து வருகிறோம்.மனிதனின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் நூலகம் அவசியம்.அதற்க்கேற்ப்ப கணினியில்  மின் நூலகத்தை அமைப்பது என்பது அவசியமானது ஒன்றே !மின் நூலகம் பற்றிய செயல்பாடுகளை மற்றும் வழிமுறைகளை காண்போம்.
கணினியில் மின்நூலகத்தை  உருவாக்குவதற்கு GSDL அதாவது Green Stone Digital Library என்ற திறவூற்று மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருள் நிறுவுவதற்கு   JRE (Java Run time Environment) கோப்பு தேவைப்படுகிறது. கணினியில் மின் நூலகத்தை உருவாக்கி விடலாம்.இந்த மென்பொருளை நிறுவிய பின் இதனை இயக்குவதற்கு (Run) ஒரு உலாவி (Browser) தேவை. இந்த இரண்டு மென்பொருளும் இருந்தால் போதும் கணினியில் மின் நூலகத்தை உருவாக்கி விடலாம்.விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பயனாளர்கள் இந்த மென்பொருளை  அவரவர்கள் பயன்படுத்தும் இயங்குதளங்களில் நிறுவி பயன் பெறலாம்.இந்த GSDL மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டிய  http://www.greenstone.org/download. 
என்ற முகவரியை  குறித்து கொள்ளுங்கள்.