*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

உபுண்டு வில் ஒரே மென்பொருளை கொண்டு பல DATABASE னை பயன்படுத்த

Mysql, Postgresql, Oracle  போன்ற Database  களை  ஒரே மென்பொருளில் பயன்படுத்த  TOra  என்னும்  மென்பொருள் பயன்படுகிறது. இது Mac OS X, MS Windows, and UNIX platforms, Linux distribution  ஆகியவற்றில் இயங்கும்.


இதனை உபுண்டு வில் நிறுவதுக்கான வழிமுறை:
  
             sudo apt-get  install tora

இதனை நிறுவிய பின்  Applications > Programming > TORA.  சென்று கிளிக் செய்தவுடன்  Database னுடைய  பயனாளர்  பெயர் , கடவுச்சொல்  கொடுத்தான் பின் உள்ளே சென்று வேண்டிய Database னை பயன்படுத்தலாம் .


இதனை xp ல் நிறுவதுக்கான முகவரி : Tora Sotware

சூரிய ஒளியில் இயங்கும் கணினி



கணினியை சூரிய ஒளி மூலம் இயக்கும் கணினி இந்தியாவிலும் வந்துவிட்டது. சிம்ற்றோநிக்ஸ் செமிகண்டுக்டோர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த முயற்சியை எடுத்து உள்ளது.இந்த பயன்பாட்டின் மூலம் சூரிய ஒளி யை சேமித்து கொண்டு, கணினி 3 அல்லது நாள் வரை கணினியை நாம் இயக்கலாம். லினக்ஸ் இயங்குதளத்துடன் இந்த கணினி கிடைகிறது. இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமான தொழில்நுட்பமாகும். இந்தியாவில் இதன் விலை 29,999 அகும். இதன் முலம் கார்பன் எமிசன் என்று சொல்லக் கூடிய, சுற்றுபுர சுழலுக்கு பாதுகாப்பான ஐ டி துறையின் ஒரு பங்கயை இது எடுத்து உள்ளது. இந்தியாவில் நிறைய இடங்களில் மின் தடை இருபதால், இந்த கணினி பயன்படும். இந்த வசதி அனைத்து துறையிலும் மின் சிக்கனத்தை உருவாக்கி  தரும்.

புதியவர்களுக்கு ஒரு செய்தி

நீங்கள் இணைய பக்கத்துக்கு புதியவரா ! கூகிள் தேடுபொறி தருகின்ற அனைத்து வசதியையும் பயன்படுத்த ஒரே ஒரு பக்கத்துக்கு சென்றால் போதும் அதுதான் www.soople.com . இந்த பக்கத்தில் கூகுளில் தேட கூடிய அனைத்து விதமான வசதியும் இங்கு உள்ளது.இதனை நாம் எளிதாக பயன்படுத்தலாம்.
இங்கு,  Search in latest news US , Search in multiple sites at once, Search within one site,
Definitions, Search scholarly papers, Search for stocks, search by number,Look who's linking to your site, Phonebook (US), Search for sites that relate to, Search in language/country,Search the full text of books. போன்ற இன்னும் பல வசதிகள் soople பக்கத்தில் உள்ளது.
         

வன்தட்டு பழுதாவதற்க்கான வாய்ப்புகள்


பொதுவகவே ஒரு சில நேரங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்யும் அனைத்து தகவலும் வன்தட்டில் பதிவு செய்யபடும் என்பதால் வன்தட்டு என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும். வன்தட்டு சரியான முறையில் இயங்க மென்பொருள்களை பயன்படுத்தி ஃபைலை ஒருங்கு இணைப்போம்(defragmentation,disk cleanup). வன்தட்டு பழுதுயடைவதற்க்கு நிறைய வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த வழி என்று பார்ப்போம். முதலில் வன்தட்டு பழுதாகிவிட்டால் நம்முடைய தகவல் அழிந்துவிடுமா ! என்ற ஐயம் இருக்கும். பழுதாகி இருக்கும் வந்தட்டிலுள்ள  தகவலை பெற சில பிரச்சனைக்கு மட்டும் Data Clinic என்ற மென்பொருள் உதவியுடன் அந்த தகவலை பெறலாம்.
 எலக்டிரிக்கல் போர்டு, மோட்டார் பாகம், ப்ரோக்ராம் அடங்கிய சிப்(Hard disk firmware) ஆகியவை வன்தட்டில் இருக்கும். இவை ஹார்ட் டிஸ்க் இயங்குவதற்க்கு பயன்படுகிறது.